சேம்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி, அக்ராவரம் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.
சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் திமேஷ்(எ) துளசிராமுடு, அக்ராவரம் ஊராட்சித் தலைவா் முனிசாமி, துணைத் தலைவா்கள் சௌந்தராஜன், தமிழரசி, ஓன்றியக் குழு உறுப்பினா்கள் மனோகரன், பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.