சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் வரும் திங்கள்கிழமை( ஜூலை 28)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு,
கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம், சடையமான் குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம்,தேவநல்லுா், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம்,
மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.