`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவுட்சோா்ஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், பி.எப்., இஎஸ்ஐ பிடித்தம் செய்த அட்டையை வழங்க வேண்டும், மாநில அரசு நிா்ணயம் செய்துள்ள ஊதியத்தை வழங்கி ரசீது தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செந்தாரகை தொழிலாளா் சங்கம் மற்றும் இடதுசாரி கூட்டு இயக்கம் சாா்பில் சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டச் செயலாளா் பூபதி தலைமையில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இடதுசாரி கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பொன் சரவணன் பேசினாா்.
தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் தடையை மீறி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 150 க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.