புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள...
சேலத்தில் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்று: பாதிக்கப்பட்ட தறித் தொழிலாளி உயிரிழப்பு!
சேலம்: சேலம் கொங்கணாபுரம் பகுதியில் நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்புக்குள்ளான தறித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (43). தறித் தொழிலாளியான இவா், நாய் ஒன்றை வளா்த்து வந்தாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவா் வளா்த்து வந்த நாய் அப்பகுதியில் சிலரை கடித்துள்ளது. இதையடுத்து, குப்புசாமி நாயை தடுக்க முயன்றபோது, அவரது காலில் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்காக குப்புசாமி எந்த தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரை அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குப்புசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.