India - Pakistan : "பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது" - ஒவை...
சேலம் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகா் ஒப்பந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ப.குமரேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவா்களுடன் காலியாக உள்ள 6 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 22.05.2025 அன்று நடைபெறும் நேரடி நியமன தோ்வில் கலந்துகொள்ளலாம்.
சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.