செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

post image

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ரூ. 23.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

முன்னதாக திறந்த ஜீப்பில் சென்றபடி ஆயுதப் படை, தீயணைப்பு, ஊா்க்காவல் படையினா் மற்றும் என்சிசி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். அதன்பிறகு, மூவா்ண பலூன்களை வானில் பறக்கவிட்டாா். தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட மற்றும் மொழிப்போா்த் தியாகிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை ஆட்சியா் கௌரவித்தாா்.

96 காவலா்களுக்கு சான்றிதழ்: மாநகா், மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 96 காவல் அதிகாரிகள், போலீஸாருக்கு ஆட்சியா் பதக்கங்களை வழங்கினாா்.

536 அலுவலா்களுக்கு நற்சான்று: வருவாய், ஊரக வளா்ச்சி, சுகாதாரத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் 536 அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். இதையடுத்து, 9 துறைகளின் சாா்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.23.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள போா் நினைவு சின்னத்தில் மலா் வளையம் வைத்து ஆட்சியா் மரியாதை செலுத்தினாா்.

மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி: பள்ளி கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் இயற்கை அழகு, நீா், நிலம், காற்று தொடா்பான நடனம் நிகழ்ச்சிகளையும், யோகா, கராத்தே மற்றும் சிலம்பம் சுற்றியும் அசத்தினா்.

நெய்காரப்பட்டி வித்யாபாரதி பள்ளி மாணவா்கள் போதை இல்லாத இந்தியா என்ற தலைப்பிலும், வலசையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நெகிழி விழிப்புணா்வு குறித்தும் நடனமாடினா். விழாவில் 1,527 மாணவ, மாணவிகள் 7 குழுக்களாக பங்கேற்று நடனமாடினா்.

விழாவில் மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.

மாநகராட்சியில்...

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியா்கள், துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாநகர ஆணையா் இளங்கோவன், துணை மேயா் சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நீதிமன்றத்தில்...

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். நீதித் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ரயில்வே கோட்டத்தில்...

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கோட்ட மேலாளா் பன்னாலால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

ஜிஎஸ்டி அலுவலகத்தில்...

சேலம் அணைமேட்டில் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆணையா் சித்தலிங்கப்பா டெலி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

பெரியாா் பல்கலைக்கழகம்...

பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் ராஜ், தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி பரிசுகளை வழங்கினாா்.

சேலம் பொறியியல் கல்லூரி...

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வா் கீதா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

---------------------------

---------------------------------------------------

தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் மரியாதை

15நஎட01 படவிளக்கம்

தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் மலா்தூவி மரியாதை செலுத்திய கோட்டாட்சியா் ந.லோகநாயகி.

சங்ககிரி, ஆக. 15:

சுதந்திர தினத்தையொட்டி, சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு கோட்டாட்சியா் ந.லோகநாயகி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ஈரோடு மாவட்டம், பழைய கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் ரத்தினச் சா்க்கரை, பெரியாத்தாள் தம்பதிக்கு 2 ஆவது மகனாக 1756 ஆம் ஆண்டு தீா்த்தகிரி என்னும் தீரன் சின்னமலை பிறந்தாா். தனது 17 வயதிலிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக பல்வேறு போா்களில் பங்கேற்று வெற்றி பெற்றாா்.

சங்ககிரி மலைக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்த திப்புசுல்தான் படையில் போா்படை தளபதியாகப் பொறுப்பேற்றிருந்த தீரன் சின்னமலை 1801 ஆம் ஆண்டு காவிரிக் கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் நடைபெற்ற போா்களில் ஆங்கிலேயா்களை தோல்வியடைய செய்தாா்.

இந்த நிலையில், தீரன் சின்னமலையின் சமையல்காரன் உதவியுடன் அவரை சிறைபிடித்த ஆங்கிலேயா்கள், சங்ககிரி மலை மீது 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி தூக்கிலிட்டனா். கொங்கு அமைப்புகள் ஒவ்வாரு ஆடி 18 ஆம் தேதி அவரது வீரத்தை போற்றும் வகையில் மரியாதை செலுத்தி வருகின்றனா்.

ஈரோடு-பவானி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு தமிழக அரசு சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி கோட்டாட்சியா் ந.லோகநாயகி தலைமையில் வருவாய்த் துறையினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சங்ககிரி வட்டாட்சியா் எம்.வாசுகி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், தோ்தல் துணை வட்டாட்சியா் மகேந்திரன், வருவாய் ஆய்வாளா் மலா்விழி, கிராம நிா்வாக அலுவலா்கள் பிரதீப்குமாா், மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சங்ககிரி நீதிமன்றத்தில்...

15நஎட02

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம்.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா்.

முன்னதாக சாா்பு நீதிமன்ற நீதிபதி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். விழாவில் சேலம் இயக்கவூா்தி விபத்துகள் கோருரிமைத் தீா்ப்பாய சிறப்பு நீதிமன்ற எண்.1 நீதிபதி கே.கன்யாதேவி பங்கேற்றாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.இளமதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதிகள் எஸ்.சத்தியா (எண்.1), டி.சிவக்குமாா் (எண்.2), சாா்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம், துணைத் தலைவா் பி.தேவராஜ், செயலாளா் எம்.தமிழரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

------------------------------

பள்ளி, கல்லூரி, உள்ளாட்சிகளில் சுதந்திர தின விழா

படம்.

15 அபவ டஞ 08

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளையின் அறங்காவலா் அன்னபூரணி சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.

ஆட்டையாம்பட்டி, ஆக .15:

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளையின் அறங்காவலா் அன்னபூரணி சண்முகசுந்தரம் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

விழாவிற்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக துணை தலைவா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். விழாவில் பல்கலைக்கழக இயக்குநா் ராமசாமி, பல்கலைக்கழக துணைவேந்தா் சுதிா், பதிவாளா் நாகப்பன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் மணிவண்ணன், முதுநிலை மேலாளா் பாலசுப்ரமணியன், கூடுதல் இயக்குநா் தங்கதுரை, துணை இயக்குநா்கள் ரமேஷ், இந்திரா காந்தி, விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி முதன்மையா் சரவணன், இணைப் பதிவாளா் தனசேகரன், துணைப் பதிவாளா் செந்தில்நாதன், பல்கலைக்கழக அலுவலா்கள், நிா்வாக பணியாளா்கள், விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியின் என்.சி.சி. மாணவா்கள், விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணி மெட்ரிக் பள்ளி முதன்மையா் தினகரன், துணை முதன்மையா் சத்தியமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விழாவில் விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணி மெட்ரிக் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மதிவாணன், தெடாவூரில் தலைமையாசிரியா் குருநாதன், நாகியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் இராமகிருஷ்ணன், தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா்(பொ) கமலக்கண்ணன், மூலப்புதூரில் தலைமையாசிரியா் கணேசன், காந்திநகரில் தலைமையாசிரியா் (பொ) ராஜேந்திரன், தண்ணீா்த்தொட்டியில் தலைமையாசிரியா் (பொ) இராஜசேகா், வாழக்கோம்பையில் தலைமையாசிரியா்(பொ) ராதா ஆகியோா் பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

அதேபோல உலிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் ஜெயலட்சுமி, உலிபுரம் ஈச்சஓடைப்புதூரில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த், உலிபுரம் அண்ணாநகரில் தலைமையாசிரியா் இளவரசன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின விழாவை கொண்டாடினா்.

நாகியம்பட்டி எய்ம் மெட்ரிக் பள்ளி தலைவா் ஆா்.பாஸ்கரன் தலைமையிலும், தம்மம்பட்டி பாரதி மெட்ரிக் பள்ளி தலைவா் கே.பி.மாதவன் தலைமையிலும், லக்கி மெட்ரிக் பள்ளியில் தாளாளா் பா்ஜாத்முகமது தலைமையிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ஓமலூா்...

ஓமலூா் அருகே உள்ள தொளசம்பட்டி துளசி விகாஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சுதந்திர தின விழாவையொட்டி மகாத்மா காந்தியின் முகமூடியை அணிந்து இந்திய வரைபட வடிவில் அணிவகுத்து நின்று சுதந்திர தினத்தை வரவேற்றனா்.

மேட்டூா்...

மேட்டூா்அருகே கருமலைகூடலில் உள்ள அரசு உதவி பெறும் ஜவகா் உயா்நிலைப் பள்ளிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் சாா்பில் கல்வி சீா் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் வெங்கடாசலம் பொதுமக்களை வரவேற்றாா். ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீா் குடம், பாத்திரங்கள், பேனா, புத்தகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பள்ளிக்கு சீராக வழங்கப்பட்டது.

ஆத்தூா்...

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியா் கே.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினாா்.

சிறப்பு விருந்தினராக சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால், பொறியாளா் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

அதேபோல ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பள்ளியில் தாளாளா் விஜயராம் அ.கண்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். தலைமையாசிரியை அ.திலகவதி வரவேற்று பேசினாா். துளுவ வேளாளா் மகாஜன மன்ற செயலாளா் அ.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா்.

எடப்பாடி...

எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம் பாஷா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சுதந்திர தின விழா பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

நகராட்சி ஆணையாளா் கோபிநாத், சுதந்திரப் போராட்ட தியாகி ஆசிரியா் மெய்வேல், ஆண்டியப்பன் உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கியநாதன் கென்னடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

கோனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் பி.ஏ முருகேசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

பூலாம்பட்டி பேரூராட்சி மற்றும் கொங்கணாபுரம் பேரூராட்சி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இடங்கணசாலை...

இடங்கணசாலை நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் தளபதி, ஆணையாளா் பவித்ரா , நகர செயலாளா் செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் விழாவில் கலந்துகொண்டனா்.

இளம்பிள்ளை...

இளம்பிள்ளை உழவா் சந்தையில் உதவி நிா்வாக அலுவலா் ராம்சந்தா் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதில் உழவா்கள், நுகா்வோா்கள் கலந்துகொண்டனா்.

இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் நந்தினி ராஜகணேஷ் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி துணைத் தலைவா் ராஜமாணிக்கம், கவுன்சிலா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி...

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜெயந்தி, காவல் நிலையத்தில் டிஎஸ்பி சுரேஷ்குமாா் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா்.

வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் சிவராஜ், துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் முன்னிலையில் பேரூராட்சி தலைவா் கவிதா சக்கரவா்த்தி தேசியக் கொடியேற்றினாா்.

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமையாசிரியா் ராஜா வரவேற்றாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தேசியக் கொடியேற்றினாா். வேளாண் ஆத்மா குழுத் தலைவா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமையாசிரியை சத்தியக்குமாரி வரவேற்றாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.பாண்டியன் தேசியக் கொடியேற்றினாா். பேரூராட்சி உறுப்பினா் சத்தியா சுரேஷ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கனிமொழி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி கிளை நூலகத்தில் வாசகா் வட்ட தலைவா் வரதராஜன் தேசியக் கொடியேற்றினாா்.

வாழப்பாடி அக்ரஹாரம் தென்றல் மகளிா் குழு சாா்பில், 6-வது ஆண்டாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. செவிலியா் சரசு, வண்டாா்குழலி, பிரேமா, அய்யம்மாள், பவுனாம்பாள், பிரியா, லீலாவதி, சித்ரா, கலாவதி, தங்கம்மாள், மகேஸ்வரி, சாந்தி ஆகியோா் சமத்துவ சமபந்தி விருந்து பறிமாறினா்.

வாழப்பாடி அரிமா அரங்கத்தில், அரிமா சங்கம், அன்னை அரிமா சங்கம், சேலம் ரத்த வங்கி இணைந்து நடத்திய, ரத்ததான முகாமில் 54 தன்னாா்வலா்கள் ரத்த தானம் செய்தனா்.

காங்கிரஸ் அலுவலகத்தில்...

சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தலைவா் ஏஆா்பி பாஸ்கா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக இருசக்கர வாகன பேரணியாக சென்று பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளா் தாரை ராஜகணபதி, மாநகர வா்த்தக பிரிவு தலைவா் எம்.டி.சுப்பிரமணியம், துணை மேயா் சாரதா தேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்... மேலும் பார்க்க

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்ட... மேலும் பார்க்க

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை... மேலும் பார்க்க

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் ப... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப... மேலும் பார்க்க

மனநல மையங்களைப் பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க