சேவல் சண்டை போட்டிகளைத் தடுக்க டிரோன்களை பயன்படுத்தும் காவல்!
ஆந்திரப் பிரதேசத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு தடை செய்யப்பட்ட சேவல் சண்டை போட்டிகள் நடைபெறாமல் தடுக்க அம்மாநில காவல் துறையினர் டிரோன்கள் மற்றும் நவீன ஏ.ஐ தொழிநுட்பத்தைப் பயனபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆந்திர மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய விடியோ சந்திப்பில் மகர சங்கராந்தி திருநாளை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் சோதனைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அம்மாநிலத்தில், மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மிகவும் பிரபலாமாக நடத்தப்படும் சேவல் சண்டைகள் இப்போது தடை செய்யப்பட்டுள்ளதினால் அவை நடைபெறாமல் தடுக்க நவீன டிரோன்களை பயன்படுத்த காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, தடை செய்யப்பட்டுள்ள சேவல் சண்டை போட்டிகள் மற்றும் சூதாட்டம் ஆகியவை நடைபெறாமல் தடுக்க, காவல் துறையினரிடம் உள்ள 130 அதிநவீன டிரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
அம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமான இந்த போட்டிகளையும் சட்டவிரோத செயல்களையும் தடுக்க என்.டி.ஆர், கிருஷ்ணா, எளூரு, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, ராஜமஹேந்திரவனம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் காவல் படையினர் குவிக்கப்பட்டு சிறப்பு கண்கானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு தடைச் செய்யப்பட்ட இந்த போட்டிகளை சட்டவிரோதமாக நடத்தியதற்கு அம்மாநில நீதிமன்றம் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.