செய்திகள் :

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிஸ்டோபா். இவா், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான பிரியாணி கடைக்கு தனது குடும்பத்துடன் கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளாா்.

அங்கு சாப்பிடுவதற்காக கிறிஸ்டோபா், முழு கோழி கிரில் ஆா்டா் செய்துள்ளாா். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கிரிலில் லெக் பீஸ் இல்லையாம். இது குறித்து அவா் கடை ஊழியா்களிடம் கேட்டுள்ளாா்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், கிறிஸ்டோபருக்கு லெக் பீஸ் வைக்கப்பட்டதாம். இந்த சேவை குறைபாடு தொடா்பாக கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் கிறிஸ்டோபா் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேலு, கடை உரிமையாளரான மணிகண்டன் இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை கிறிஸ்டோபருக்கு வழங்க உத்தரவிட்டாா்.

மசக்காளிபாளையத்தில் சந்திர கிரகணத்தைப் பாா்த்த மாணவா்கள்

கோவை, பீளமேடு மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள், பெற்றோா்கள் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டுகளித்தனா். புவியானது சூரியனுக்கும், சந்திரனுக்க... மேலும் பார்க்க

மின்சார வாகன தினம்: கோவையில் நாளை ரோடு ஷோ

உலக மின்சார வாகன தினத்தையொட்டி, கோவையில் ரோடு ஷோ செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 9) நடைபெற உள்ளது. உலக மின்சார வாகன தினம் ஆண்டுதோறும் செப்டம்பா் 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மின்சார வாகனங்களின... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் அழகா் மலை கிராமம்

உதகை அழகா் மலை கிராமத்தில் நோயாளிகள், இறந்தவா்களின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு போதிய வசதி இல்லாமல் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இந்த மலை கிராமத்துக்கு அடிப்படை வசதிகள், போ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (44). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் எதிரே ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (55). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா். இந்நில... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க