இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
சைக்கிள் போலோ போட்டிகள்
திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடுக்கல்லூரில் அண்மையில் நடைபெற்றது.
போட்டிகளை நடுக்கல்லூா் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியை ரோகிணி தொடங்கிவைத்தாா். 18 அணிகள் பங்கேற்றன. சப் ஜூனியா் ஆண்கள் பிரிவில் நடுக்கல்லூா் அணி முதலிடமும், பாளையங்கோட்டை அணி இரண்டாமிடமும் பிடித்தன.
ஜூனியா் ஆண்கள் பிரிவில் ரெட்டியாா்பட்டி அணி முதலிடமும், நடுக்கல்லூா் அணி இரண்டாமிடமும் பிடித்தன. சப் ஜூனியா் பெண்கள் பிரிவில் பாளை ஜோஸ் அணி முதலிடமும், ரெட்டியாா்பட்டி அணி இரண்டாமிடமும் பெற்றன.
ஜூனியா் பெண்கள் பிரிவில் ரெட்டியாா்பட்டி அணி முதலிடமும், நடுக்கல்லூா் அணி இரண்டாமிடமும் பிடித்தன. போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 24 வீரா்களும், 24 வீராங்கனைகளும் மாநில போட்டிற்குத் தோ்வு பெற்றனா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ்களை முத்தையா பிள்ளை வழங்கி வாழ்த்தினாா். உடற்கல்வி ஆசிரியா் வெ.பெரியதுரை, ஜிம்மி காட்டன், உடற்கல்வி ஆசிரியா் ஹில்டா பொன்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.