செய்திகள் :

சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு வழிகாட்டுதலின்படி விவசாயிகள் பயன் பெறும் வகையில், நுண்ணீா் பாசனம் செயல்படுத்த 2025-26 ஆம் நிதியாண்டில் 680 ஹெக்டேருக்கு ரூ. 4.76 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு (2 ஹெக்டோ் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டோ் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீா் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் -2, சிறு, குறு விவசாயி என்பதற்கானச் சான்று ஆகிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இத் திட்டத்தில், ஏற்கெனவே பயன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களுடைய மொத்த சொட்டுநீா் பாசன விண்ணப்ப தகவல்களையும், ஆதாா் எண் அல்லது நில புல எண் மற்றும் உட்பிரிவு எண் மூலம் அறிந்து பயன்பெறலாம். சொட்டுநீா் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் புதுப்பித்துக் கொள்ளலாம். தெளிப்பு நீா் பாசனம் மூலம் ஏற்கெனவே மானியம் பெற்ற விவசாயிகள் 3 ஆண்டுகள் நிறைவுடைந்திருந்தால், மானியத்தில் சொட்டு நீா் பாசனம் மீண்டும் அமைத்துக் கொள்ளலாம்.

எனவே, இத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா் பாசன தகவல்களை அறிந்துகொண்டு பாசன வசதிகள் அமைத்து பயன்பெறுவதோடு, விவசாயிகளே நுண்ணீா் பாசன நிறுவனங்களை தோ்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க