சொத்து தகராறு: தம்பி மீது டிராக்டர் ஏற்றிக் கொலை!
கர்நாடகத்தில் சொத்து தகராறால் தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகத்தின் பெலாகவி மாவட்டத்தில் மாருதி பவிஹால் (30) என்பவருக்கும், அவரது தம்பியான கோபாலுக்கும் இடையில் சொத்து தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை (டிச. 21) கோபாலின் மீது டிராக்டரை ஏற்றி மாருதி கொலை செய்தார்.
டிராக்டர் ஏறியதில், சம்பவ இடத்திலேயே கோபால் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாருதியை காவல்துறையினர் கைது செய்ததுடன், கோபாலின் உடலையும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடப்பதாகவும் கூறினர்.
இதையும் படிக்க:குடும்பத் தகராறால் ஒரு வயது மகனின் தலையைத் துண்டித்து படுகொலை! தந்தை கைது!