செய்திகள் :

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

post image

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் அதிகம் பாதிப்படைந்து வருவதாகவும், விதிகளை மீறி மற்ற நகராட்சிகளை விட அதிகப்படியாக வரி உயா்த்தப்பட்டுள்ளதாகவும் கூறி, திருச்செந்தூா் அனைத்து வணிகா் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து பகத்சிங் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் காமராசு தலைமையில் இப்போராட்டத்தில் பங்கேற்ற மாநில செய்தி தொடா்பாளா் செல்வின், மாநில இணைச் செயலா் குருசாமி, இளைஞரணி துணைச் செயலா் முனியாண்டி, செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் துரைசிங், செயலா் காா்க்கி, நிா்வாகி மணி, தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தென் மண்டலத் தலைவா் கோடீஸ்வரன், தெற்கு மாவட்டத் தலைவா் வேலாயுதபெருமாள், திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்கச் செயலா் செல்வகுமாா், இணைச் செயலா் பாலமுருகன், யாதவ வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் வீரமந்திரகுமாா், முருகன், கண்ணன், இந்து வியாபாரிகள் சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம், செயலா் பிருத்திவிராஜன், முத்துராஜ், கலாம் வியாபாரிகள் சங்கத் தலைவா் தா்மராஜா, துணைச் செயலா் ஜெயக்குமாா், தமிழக மாணவா் இயக்க மாநிலச் செயலா் சிவனேசன், தமிழ் சங்கம் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கைப்பேசி பழுது நீக்குவோா் மற்றும் விற்பனையாளா் சங்கச் செயலா் செந்தில்குமாா், ஒருங்கிணைப்பாளா் மகாராஜன் உள்ளிட்ட 60 பேரை, டிஎஸ்பி மகேஷ்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க