பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
சோசியல் மீடியாவால் தம்பதிகளுக்கு இடையே காதல் கூடியிருக்கிறதா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?
இன்றைய டிஜிட்டல் உலகில், சோசியல் மீடியா நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. உறங்கி எழும்போதே கைகள் செல்ஃபோனை தேட ஆரம்பித்து விடுகின்றன. வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்கள் எல்லாம் பார்த்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் நான்கு ரீல்ஸ்களை நண்பர்களுக்குத் தட்டிவிட்டு, அப்படியே ட்விட்டர் பக்கம் சென்று உலகத்தில் என்ன நடக்குது என்று தெரிந்துகொண்டுதான் படுக்கையைவிட்டே எழுந்து கொள்கிறோம். அந்த அளவுக்குச் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆளுகின்றன. என்னதான் இன்றைய சமூக வலைத்தளங்களால் சைபர் கிரைம், பணம் இழப்பு, பெண்கள் மீதான டிஜிட்டல் வன்முறை போன்றவை இருந்தாலும் அதில் சில நல்ல விஷயங்களும் உள்ளன.
சோசியல் மீடியாவால் என்ன நன்மை உள்ளது?
தொலைதூர உறவுகளை இணைக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் இந்த ஊடகம் பெருமளவில் உதவியாக இருக்கிறது. தினம் தினமும் தனித்தனியாக ஒருவரிடம் பேசிக்கொள்ள இயலாது, மாறாக தங்களின் செயல்பாடுகளைப் புகைப்படங்களாகவும் செய்திகளாகவும் பிறரிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சமூக ஊடகங்கள் மூலம் புதிய நண்பர்களைச் சந்திக்கவும், பேசவும் முடியும்.
சோசியல் மீடியாவில் தங்களின் உணர்வுகளை, கருத்துக்களை எளிதில் அடுத்தவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் அவர்கள் பலரிடம் இணைப்பில் உள்ளதாக உணர்ந்து கொள்கிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/rrvbkbej/hero-image-8.jpg)
`உறவுகளை மறந்துவிடுகிறோம்’
ஒரு பக்கம் பாசிட்டிவ் பக்கங்கள் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடப்பதால் சுற்றி இருக்கும் உறவுகளை நாம் மறந்து விடுகிறோம். சின்ன, சின்ன விஷயங்களுக்குக்கூட நேரில் பாராட்டுவதைத் தவிர்த்து சோசியல் மீடியாவில் புகழ்கிறோம். அருகில் இருப்பவரிடம் அதைப் பேசாமல் பொது இடத்தில், வெளி உலகத்திற்கு அப்படி சொல்வதால் யாருக்கு என்ன பயன்?
பலரும் இப்போது couple vlog ஆரம்பித்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இது பலரின் அன்றாட வாழ்க்கையின் மீதான பாதையை மாற்றுகிறது. ஒரு ஜோடி தங்களின் வாழ்வை, எல்லா பயணங்களை, தாங்கள் செய்யும் ஷாப்பிங்களை, ரீல்ஸாக வெளியிடும் போது அது அடுத்து குடும்பங்களில் ஒரு அழுத்தததை ஏற்படுத்துகிறது. அது போல் நம்மால இருக்க முடியல என்ற ஏக்கமும், இருக்க வேண்டும் என்கிற அதீத செலவுக்குள்ளும் செல்கிறார்கள். சோசியல் மீடியாவில் பதிவிடும் வீடியோக்களுக்கு பின்னால் தம்பதிகள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா எனக் கேட்டால், அதுவும் சந்தேகம் தான்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/g7m1zdyr/hero-image-6.jpg)
ஒரு பக்கம் சோசியல் மீடியாவில் தம்பதிகள் உயர்வதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், வாழ்க்கை ரீதியாகவும் சரி வருமான ரீதியாகவும் சரி சிலர் சோசியல் மீடியாவை பயன்படுத்தி உயர்ந்து வருகின்றனர். ஆனால் சோசியல் மீடியாவால் தம்பதிகளில் காதல் கூடியிருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலை உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் விகனுடன் பகிர்ந்துள்ளார்.
``உண்மையாகவே சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களின் காதல் கூட வில்லை என்று தான் நான் சொல்வேன். கணவன் மனைவியே இருக்கும் ஊடல் இருவரும் பேசிக் கொள்வதிலும், சிரிப்பதும், அவர்களுடன் நேரில் நேரம் செலவிடுவதில் தான் இருக்கிறது” என்கிறார் நிபுணர் சித்ரா.
``யாருக்கெல்லாம் சமூகத்தின் கவனம் தேவைப்படுகிறதோ அவர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள். தற்போது சமூதாயமாக சோசியல் மீடியாவை தான் பார்க்கிறார்கள். அவர்களுக்குள்ளே ஒரு பாராமீட்டர் போல் செட் செய்து கொண்டு இதை நான் செய்ய வேண்டும் அதை நான் செய்ய வேண்டும் என்று சோசியல் மீடியாவின் ஈர்ப்புக்காக இதை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகி குடும்பத்துக்குள் சண்டைகள் வரலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/dad82xvo/chitra-aravind.jpg)
குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இந்த சமுதாயத்தின் கவனம் அதிகம் தேவைப்படுவதில்லை, அதற்காக அவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாமல் இல்லை அதற்கான எல்லையை அவர்கள் வைத்துக் கொள்கின்றனர். ஆனால் தனிமையில் இருப்பவர்கள் அல்லது நெருங்கிய வட்டாரங்கள் இல்லாதவர்கள் `சமூக வலைத்தளங்கள் தான் உலகின் அங்கீகாரம்’ என நினைத்துக் கொண்டு லைக்காகவும் ஷேருக்காகவும் இவ்வாறு செய்கின்றனர்.
தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று தான் இவ்வாறு சமூக வலைதளங்களில் தங்களது வாழ்க்கை முறையை பதிவிட்டு வருகின்றனர். இதுவும் ஒரு வகையான போதை தான். டோபமைன் என்ற நியூரோ டிரான்ஸ்மீட்டர் ஹார்மோன் சுரப்பதாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் இதனை செய்கிறார்கள். தம்பதிகளிடையே நேரம் செலவிடுவது, மனம் விட்டு பேசுதல் இவைதான் அவர்களுக்குள் அன்னியோன்னித்தை உண்டாக்குமே தவிர சமூக வலைத்தளங்கள் மூலம் அந்த காதலை பெற முடியாது” என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play