செய்திகள் :

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

post image

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்யப்போவதாக குடியரசுத் தலைவர் முர்முக்கு அவர் ராஜிநாமா கடிதத்தைத் திங்களன்று கடிதம் அனுப்பினார். அவருக்கு இன்னும் சுமார் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த முடிவை எடுத்ததாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் நோக்கம் இருப்பதாக அவர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,

ஜகதீப் தன்கரின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நேற்று நண்பகல் 12.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறிது நேர விவாதம் முடிந்த பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு அவை கூட முடிவு செய்தது.

அதேபோல் மாலை 4.30 மணிக்கு ஜக்தீப் தன்கர் தலைமையில் மீண்டும் குழு கூடியது. ஆனால் நட்டா, கிரன் ரிஜிஜூ வருகைக்காகக் காத்திருந்தபோது, அவர்கள் வரவேயில்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்துகொள்ளாதது ஐக்தீப் தன்கருக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர் கோபமடைந்த அன்றைய நாள் முழுவதும் அலுவல் ஒத்திவைத்தார்.

நேற்று மதியம் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்போது ஜக்தீப் தன்கர் ராஜிநாமா செய்துள்ளார். அதற்கு அவர் உடல்நல பாதிப்பு பற்றி காரணங்களைச் சொல்லியுள்ளார்.

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு இல்லை: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

நமது நிருபர்உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் விரைவில் மக்களிடம் முழு உடல் ஸ்கேனர் கருவிகள் மூலம் பரிசோதனை

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிக... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் த... மேலும் பார்க்க

விமானக் கட்டணம் கடும் உயர்வு பிரச்னை: மத்திய அமைச்சர் பதில்

விமானக் கட்டணங்கள் அவ்வப்போது கடுமையாக உயர்த்தப்படுவதை மத்திய அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதில்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்ப... மேலும் பார்க்க

8-ஆவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன்?: மத்திய அமைச்சர் பதில்

மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று மக்களவையில் திருப்பெரும்புதூர் தொகுதி திமுக உறுப்பினரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.இதற... மேலும் பார்க்க