கோடையில் சிறுநீா்ப் பாதை தொற்றைத் தவிா்க்க 4 லிட்டா் தண்ணீா்: மருத்துவா்கள் அறிவ...
ஜன நாயகன் அப்டேட்!
நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது.
இதையும் படிக்க: விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி மனுத்தாக்கல்!
மேலும், தமிழ் புத்தாண்டான ஏப். 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்று அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜன நாயகன் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.