செய்திகள் :

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

post image

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, கலைஞர் கருணாநிதி குறித்த நினைவுகளை நெப்போலியன் உடன் பகிர்ந்துகொண்டார்.

நெப்போலியன் குடும்பத்துடன் கனிமொழி

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெப்போலியன் பதிவிட்டுள்ளதாவது,

''நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, கலைஞரின் மகள் கனிமொழி, ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்!

நான்கு நாள்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கனிமொழி ஆகியோருடன் நானும், கலந்து கொண்டேன்.

இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு கனிமொழி வருகைதந்து தனுஷையும் அக்‌ஷயாவையும் வாழ்த்தினார்கள். சிலமணிநேரம் தலைவர் கலைஞரைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம். மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

வழக்குரைஞா் பணியை கடமையாகக் கருத வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா

சென்னை: வழக்குரைஞா் பணியை தொழிலாக அல்லாமல் கடமையாகக் கருத வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாா் கவுன்சிலில், ‘த... மேலும் பார்க்க

தேசிய குடிமைப் பணிகள் நாள்: முதல்வா் வாழ்த்து

சென்னை: தேசிய குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தேசிய குடிமைப் பணிகள் நாளில், நமது மக்களாட்சியை வலுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கும்போது, பிற மாநிலங்களில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதென தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழ... மேலும் பார்க்க

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய... மேலும் பார்க்க

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட... மேலும் பார்க்க