செய்திகள் :

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!

post image

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் இருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜம்மு, உதம்பூரில் இருந்து தில்லிக்கு மூன்று சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்முவில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு சிறப்பு ரயில் எண் 04612 மணிக்கு புறப்பட்டுள்ள நிலையில், உதம்பூரில் இருந்து பகல் 12.45 மணியளவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும், இரவு 7 மணிக்கு ஜம்முவில் இருந்து 22 முன்பதிவுப் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம் தகவல்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ட்ரோன் தாக்... மேலும் பார்க்க

என் வீட்டருகே இடைவிடாது குண்டுவெடிப்பு சப்தங்கள்: முதல்வர் ஒமர் அப்துல்லா

நான் இருக்கும் இடத்தில் இடைவிடாது குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜம்முவில் இப்போது மின் தடை. ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின... மேலும் பார்க்க

மீண்டும் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறதா இந்தியா? இன்றும் இருளில் மூழ்கிய நகரங்கள்!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொ... மேலும் பார்க்க

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க