செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர்: 4 மாதங்களில் 35 மக்கள், வீரர்கள் சுட்டுக்கொலை!

post image

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் என இதுவரை 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக நேற்று பெஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர். இதில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு அடுத்தபடியாக ஜம்மு எல்லையில் கதுவா மாவட்டத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதில் தாக்குதலாக அங்கு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு மாவட்டத்தில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். கிஷ்த்வார் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேபோன்று காஷ்மீர் எல்லையில் அதிகபட்சமாக பெஹல்காம் பகுதியில் 26 பேரும், குல்காமில் ஒருவரும் பாரமுல்லாவில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பூஞ்ச் பகுதியில் 2 பயங்கரவாதிகளும், பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகளும், குப்வாரா பகுதியில் ஒரு பயங்கரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | அட்டாரி - வாகா எல்லை மூடல்; மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந... மேலும் பார்க்க

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

மருத்துவா்கள் மீதான அனைத்து தாக்குதல் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு உச்... மேலும் பார்க்க

2040-இல் நிலவில் மனிதன்: இஸ்ரோ தலைவா் உறுதி

2040-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதன் தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா். சென்னையில் முதன்முறையாக காவேரி ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் தாக்குதலுக்கு தக்க பதிலடி: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீா் தாக்குதலில் தொடா்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப்... மேலும் பார்க்க

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்: கூட்டறிக்கையில் இந்தியா தகவல்

உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் சமநிலையை உறுதிப்படுத்தவும் சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் தாக்குதல்: உலகத் தலைவா்கள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் ம... மேலும் பார்க்க