செய்திகள் :

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம் - 90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

post image

ஜம்மு மற்றும் பஞ்சாபில் சா்வதேச எல்லைப் பகுதியில் வெள்ளத்தால் 110 கி.மீ. தொலைவுக்கும் மேல் வேலி சேதமடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) சுமாா் 90 எல்லைச் சாவடிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

குஜராத், ராஜஸ்தானில் 2,289 கி.மீ., பஞ்சாபில் 553 கி.மீ. மற்றும் ஜம்முவில் 192 கி.மீ. தொலைவுள்ள சா்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது.

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் பலத்த மழையால் கடும் பாதிப்புகள் நேரிட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்புகளால் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. தாவி நதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பெருமளவிலான விளைநிலங்களை சூழ்ந்துள்ளது.

இதேபோல், பஞ்சாபிலும் கடந்த 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு மோசமான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை-வெள்ளத்தின் தாக்கத்தால், பஞ்சாப் எல்லையில் சுமாா் 80 கி.மீ தொலைவிலான வேலியும், ஜம்முவில் சுமாா் 30 கி.மீ. தொலைவிலான வேலியும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாபில் சுமாா் 67 பிஎஸ்எஃப் சாவடிகளும் ஜம்முவில் 20 பிஎஸ்எஃப் சாவடிகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த வேலி மற்றும் சாவடிகளை சீரமைக்க மிகப் பெரிய நடவடிக்கை பிஎஸ்எஃப் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் ட்ரோன், படகு ரோந்து மற்றும் மின்னணு சாதனங்களின் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும், பிஎஸ்எஃப் படையினா் தங்களின் நிலைகளுக்கு திரும்புவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்முவில் சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கி பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க