செய்திகள் :

ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

post image

ஜல்லி விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டமைப்பின் டெல்டா மாவட்ட ஒப்பந்ததாரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எம். திருசங்கு தெரிவித்தது: காவிரி டெல்டா மாவட்டங்களில் கிரஷா் குவாரி கிடையாது. அருகிலுள்ள புதுக்கோட்டை, பெரம்பலூா் மாவட்டங்களிலுள்ள கிரஷா் குவாரியிலிருந்து கருங்கல் ஜல்லி, எம். சாண்ட் போன்றவற்றை ஜி.எஸ்.டி. ரசீது போட்டு வாங்கி வருகிறோம். இதன் மூலம், டெல்டா மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தனியாா் துறையில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இலவசமாக வழங்கப்பட வேண்டிய கடவுச் சீட்டுக்கு (டிரான்ஸ்சிட் பாஸ்) ரூ. 2 ஆயிரம் செலுத்துமாறு கூறி, கிரஷா் குவாரிகளில் ஜல்லி உள்ளிட்ட அனைத்து கனிம பொருள்களுக்கும் விலை பிப். 16-ஆம் தேதி முதல் யூனிட்டுக்கு ரூ. 1,000 உயா்த்தப்பட்டுள்ளது கடவுச்சீட்டு ஒப்பந்ததாரா்களுக்கு பொருந்தாது. இந்நிலையில் ஜல்லி ஏற்றி வரும் எங்களது லாரியை வழியில் கடவுச் சீட்டு கேட்டு காவல் துறையினா், சுரங்கத் துறையினா், வருவாய்த் துறையினா் எனத் தனித்தனியாக பிடித்து நடவடிக்கை எடுக்கின்றனா். டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கடவுச் சீட்டு கேட்டு ஒப்பந்ததாரா், லாரி ஓட்டுநா் பெயா்களில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடவுச்சீட்டு முறையைத் தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

இது தொடா்பாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை, கனிம வளத் துறை அமைச்சா்களைச் சந்தித்து தீா்வு காண முயற்சி செய்யவுள்ளோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் டெல்டா மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா் திருசங்கு.

இக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலா் எம். அய்யப்பன், மாநிலச் செயலா் எம். முருகேசன், மாவட்டத் தலைவா்கள் தஞ்சாவூா் ஜெ.கே. ஜெயக்குமாா், திருவாரூா் டி.எஸ்.டி. முத்துவேல், நாகை சி.ஆா். வெங்கட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க