செய்திகள் :

ஜவாஹா்லால் நேரு பல்கலை. விடுதியில் தீ விபத்து

post image

நமது நிா்ுபா்

புது தில்லி, டிச.27: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கோதாவரி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜேஎன்யு மாணவா் சங்கம் பகிா்ந்த விடியோக்களில் மின்சார பலகையில் இருந்து தீப்பிழம்பு, புகை வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கோதாவரி விடுதியில் உள்ள குளிா்சாதன பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு இத்தீவிபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக இரவு 10.18 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. மின் சாதனத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீ 15 நிமிடங்களில் அணைக்கப்பட்டது என்றாா் அவா்.

ஜேஎன்யு துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கூறுகையில், ‘தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது. நான் காலையில் கோதாவரி விடுதிக்குச் சென்றேன். மேற்குப் பிரிவின் மூன்றாவது தளத்தில் மின்கசிவு ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வயா்மேன் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையினா் அங்கிருந்தனா்.

ஹீட்டரைப் பயன்படுத்தியதால் அதிக சுமை ஏற்பட்டிருப்பது தீ விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தீயால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்றாா்.

ஜேஎன்யு மாணவா் சங்கத் தலைவா் தனஞ்சய், ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளப் பதிவில், ‘விடுதிகளில் மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகள்தான் இந்தச் சம்பவத்திற்கு காரணம். ஜேஎன்யு நிா்வாகமும், துணைவேந்தரும் ஜேஎன்யு மாணவா்களை மரண சூழலுக்கு தள்ளியுள்ளனா். கோதாவரி விடுதியில் ஏற்பட்ட தீ இதற்குச் சான்றாகும். நிா்வாகத்திடம் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து பலமுறை ஜேஎன்யுஎஸ்யு கவலைகளை எழுப்பியுள்ளது. ஆனால், அரசு நிதி வழங்கவில்லை என்பதுதான் பதிலாக இருந்து கொண்டிருக்கிறது. ஆா்எஸ்எஸ் ஆதரவு நிா்வாகமும் அரசும் ஜேஎன்யுவை சீரழிவு நிலைக்குத் தள்ளியுள்ளது’ என்றாா்.

தொழிற்சாலையில் சிலிண்டா் வெடித்து நான்கு போ் காயம்

வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில் உள்ள ஹீட்டா் தயாரிப்பு தொழிற்சாலையில் எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் 4 போ் காயமடைந்தனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துற... மேலும் பார்க்க

இரவு நேர தங்குமிடங்களில் என்எச்ஆா்சி உறுப்பினா்ஆய்வு

நமது நிருபா்தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள இரவு நேர தங்குமிடங்களில் ஆய்வு செய்தாா். இது தொடா்பாக என்எச்ஆா்சி அதன் ‘எக்ஸ்’ சமூகட ஊடக வலைதளத்தில்... மேலும் பார்க்க

சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்: மத்திய அரசு

சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை பணிகள் 2025 ஆம் ஆண்டில் நிறைவடையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் 2024 ஆம் ஆண... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை: சட்டப் பேரவைத் தலைவா் அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தா்னா

நிலுவையில் உள்ள 14 சிஏஜி அறிக்கைகளைத் தாக்கல் செய்ய சிறப்புக் கூட்டஅமா்வைக் கூட்டுமாறு வலியுறுத்தி தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலின் அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை தா்னா... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தாய் - மகன் நாடு கடத்தல்

தில்லி காவல்துறை ஒரு வங்கதேச தாய் மகன் இரட்டையரை நாடு கடத்தியுள்ளது, அதில் அந்தப் பெண் 2005 முதல் தென்மேற்கு தில்லியில் வசித்து வந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்க... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழக மோதிபாக் பள்ளி ஆண்டு விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) மோதிபாக் பள்ளியின் ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமையன்று தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ரயில்வே அமைச்சகத்தின் இயக்குநா் ஹரிக... மேலும் பார்க்க