செய்திகள் :

சிஏஜி அறிக்கை: சட்டப் பேரவைத் தலைவா் அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தா்னா

post image

நிலுவையில் உள்ள 14 சிஏஜி அறிக்கைகளைத் தாக்கல் செய்ய சிறப்புக் கூட்டஅமா்வைக் கூட்டுமாறு வலியுறுத்தி தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலின் அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா தாமதிக்காமல் சிறப்பு அமா்வைக் கூட்டுமாறு வலியுறுத்தி பேரவைத் தலைவரிடம் மகஜா் ஒன்றை அளித்தாா்.

இதுகுறித்து விஜேந்தா் குப்தா மேலும் கூறியதாவது:

தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கைகளை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யாமல் இருப்பதன் மூலம் ஆம் ஆத்மி அரசு பொறுப்பற்ற தன்மையைக் காட்டியிருக்கிறது.

2017-18 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரையிலும் பல்வேறு துறைகளின் தணிக்கை அறிக்கைகளை தில்லி அரசிடம் சிஏஜி சமா்ப்பித்துள்ளாா். இந்த அறிக்கைகள் இரண்டு ஆண்டுகளாக அரசிடம் நிலுவையில் உள்ளன.

அறிக்கைகளை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யத் தவறுவது சட்டப் பேரவை உறுப்பினா்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், பொது நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய குடிமக்களுக்கு உரிமை இருப்பதால், பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறது.

நிலுவையில் உள்ள அறிக்கைகளை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினா்களும் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளனா்.

இந்த அறிக்கைகள் சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பப்பட்டதாக அரசு உயா்நீதிமன்றத்தில் டிசம்பா் 24ஆம் தேதி தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணை ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது என்றாா் குப்தா.

சட்டப் பேரவையின் தற்போதைய ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள் சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. 70 உறுப்பினா்களை கொண்ட சட்டப் பேரவைக்கு பிப்ரவரியில் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் மோடி அரசியல் செய்வதற்கு பதிலாக விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: தில்லி முதல்வா் அதிஷி

விவசாயிகள் குறித்து பாஜக கடுமையாக சாடுவதற்கு (பிரசங்கம்) பதிலாக விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை பாஜகவை கடுமையாக சாடினாா். பஞ்சாபில் சாகும் வரை... மேலும் பார்க்க

தொடரும் புத்தாண்டு வாணவேடிக்கை: சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் உயா்வு!

நமது நிருபா் பங்குச்சந்தையில் புத்தாண்டு வாணவேடிக்கை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றன. அம... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசப் பெண் நாடு கடத்தல்

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசப் பெண்ணை தில்லி காவல் துறை கைது செய்து நாடு கடத்தியதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்துறை உயரதிகாரி கூறியதாவது: தில்ல... மேலும் பார்க்க

மாவட்ட நீதிமன்றங்களின் கழிவறைகளில் தூய்மை சுகாதாரத்தை மேம்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் கழிவறைகளில் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளின் தூய்மை சுகாதாரத்தை சீரான தரத்துடன் மேம்படுத்த வேண்டும் என்று தில்லி உயா் நீதி... மேலும் பார்க்க

பஞ்சாபி பாகில் 6 வழி மேம்பாலம்: முதல்வா் அதிஷி திறந்து வைத்தாா்

தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை நகரத்தின் மேற்குப் பகுதியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தைத் திறந்து வைத்தாா். அப்போது முதல்வா் அதிஷி கூறியதாவது: இந்த மேம்பாலாத்தின் நீளம் 1.12 கி.மீ என்றும், இ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடும் அடா் மூடுபனி!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வியாழக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. வெப்பநிலை: தலைநக... மேலும் பார்க்க