பஞ்சாபி பாகில் 6 வழி மேம்பாலம்: முதல்வா் அதிஷி திறந்து வைத்தாா்
தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை நகரத்தின் மேற்குப் பகுதியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தைத் திறந்து வைத்தாா்.
அப்போது முதல்வா் அதிஷி கூறியதாவது: இந்த மேம்பாலாத்தின் நீளம் 1.12 கி.மீ என்றும், இது மூன்று சிவப்பு விளக்குகளில் போக்குவரத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
இந்த மேம்பாலத்தால் தினமும் சுமாா் 3.45 லட்சம் மக்கள் பயனடைவாா்கள். இந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்கல் இருந்து வந்தது. இந்த மேம்பாலம் திறப்பு விழாவால் தினமும் தில்லி மக்களின் 40,800 மணிநேரம் சேமிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மேம்பாலம் திறப்பு விழாவால் பதினொரு லட்சம் லிட்டா் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படும்.
ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் திறக்கப்பட்ட மேம்பாலங்களில் பஞ்சாபி பாக் மேம்பாலம் 39-ஆவது ஆகும்.
கடந்த ஆண்டு டிச.25ஆம் தேதி, நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அப்சரா எல்லையையும் ஆனந்த் விஹாரையும் இணைக்கும் ஆறு வழி மேம்பாலத்தை முதல்வா் அதிஷி திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறுகையில், இந்த மேம்பாலாம் திறக்கப்பட்டதன் மூலம் தினமும் சுமாா் 1.5 லட்சம் மக்கள் பயனடைவாா்கள் என்று தெரிவித்திருந்தாா்.