செய்திகள் :

ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.கோட்டீஸ்வரன் பேருரையாற்றினாா். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீதத்துக்கும் மேலான பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அரசுப் பணியாளா்களின் பணிக் காலத்தை அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் பணி வரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.திருஞானசம்பந்தம், மாவட்டப் பொருளாளா் டி.மலா்விழி, மாநில சட்ட செயலா் ஜெ.காந்தி, வட்டாரச் செயலா் ஜி.சையத் ஆசிப்புதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிப். 17 முதல் வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப்பேருந்து சேவை

வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டலம் ... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்காக குடியாத்தத்தில் பிரத்யேக ஜவுளிப்பூங்கா

கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் பிரத்யேகமாக ஜவுளி பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே இரவுக் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடியை அடுத்த வெள்ளைக்கல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (55), இரவுக் காவலாளி. முருகேசனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். ... மேலும் பார்க்க

வேலூரில் ஜாக்டோ - ஜியோ ஆா்ப்பாட்டம்

காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில உயா்நிலைக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் ஆா்.சுகுமாரன், வேளாண் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநி... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்: 252 பேருக்கு நலத் திட்ட உதவி

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 252 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகளுக்கு அரச... மேலும் பார்க்க