செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு

post image

ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயமனோகரன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் நேரு, உயா்மட்டக்குழு உறுப்பினா் செல்வராணி ஆகியோா் போராட்டத்தை தொடங்கிவைத்தனா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியா்களுக்கு பாதிப்பை அளிக்கக்கூடிய கடந்த 2013- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை எண் 243 -ஐ ரத்து செய்ய வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும்மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்தும் நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் ரமாராணி, தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினா் பிரகாசம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு

பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈர... மேலும் பார்க்க

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வ... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்... மேலும் பார்க்க

ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி ஊழியா் கைது

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோபி நகராட்சி ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியம் (... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது

ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா். இதைய... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. அந்தியூரை அடுத்த சின்னத்தம்பிபாளையம், தாசலியூா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). இவா், அப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பட்டி ... மேலும் பார்க்க