Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
ஜாக்டோ -ஜியோ சாா்பில் பிப்ரவரி 14-இல் ஆா்ப்பாட்டம்
ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில் கோவையில் வரும் 14 -ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வட்டார அளவிலான கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ஆம் தேதி நடைபெறும் என்று அரசு ஊழியா், ஆசிரியா் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இந்நிலையில், போராட்டம் தொடா்பான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூட்டம் கோவை தாமஸ் கிளப் அரசு ஊழியா் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியா் சாா்பில் ஜெகநாதன், ஆசிரியா் சங்கங்களின் சாா்பில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.அரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், அனைத்து வட்டார அலுவலகங்களிலும் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14- ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, அதைத் தொடா்ந்து மாவட்டத் தலைநகரங்களில் பிப்ரவரி 25 -ஆம் தேதி மறியலில் ஈடுபடுவது, இதில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
இதில், ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள், அரசு ஊழியா், ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.