செய்திகள் :

``ஜாபர் சாதிக் போதைப்பொருள் பணத்தை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் முதலீடு செய்திருக்கிறார்" - அண்ணாமலை

post image
தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஜாபர் சாதிக் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, ``சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்ணாமலை - ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதே காலகட்டத்தில்தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும். குறிப்பிட்ட காலகட்டத்தில், தி.மு.க நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

US: 'வானில் தெரிந்த மர்ம ட்ரோன்கள்' - என்ன சொல்கிறார் ட்ரம்ப்... உண்மையை மறைக்கிறதா அமெரிக்க அரசு?

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் பல பகுதிகளில் மர்மமான ட்ரோன் போன்ற பொருள்கள் வானில் தோன்றி மறைவது கவனிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை இயக்குவது யாரெனத் தெரியாததால் மக்கள் குழப்பமடைந்திருக்கின்றன... மேலும் பார்க்க

Modi vs Congress 'நேரு, இந்திரா காந்தியை சாடிய மோடி; காட்டமான காங்கிரஸ்' - அதகளமான நாடாளுமன்றம்

அட்டாக் மோடுபிரதமர் மோடிநாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸின் ஒரு குடும்பம் அரசமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் மட்டுமே 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது ... மேலும் பார்க்க

தர்மபுரி: அருணாச்சலேஸ்வரருக்கு சீர்வரிசை எடுத்து அசத்திய இஸ்லாமியர்கள்; ஆச்சர்யப்பட்ட நிர்வாகம்!

தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் அமைந்துள்ளது சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாத பௌர்ணமி திதி நட்சத்திரத்தில் அருணாச்சலேஸ்வரர்- ஸ்ரீ உமா மகேஸ்வரி அம்பிகா திருக்கல்ய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சரத் பவார், அஜித் பவார் சந்திப்பு... இணைய விரும்பும் பவார் குடும்பம் - சாத்தியமா?!

தேசியவாத காங்கிரஸ்இரண்டாக உடைந்தமகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் சென்று தேசியவ... மேலும் பார்க்க

EPS-ஐ மிரட்டும் 5 இடிகள், 'டிச 15' பொதுக்குழுவுக்குப் பின் மீள்வாரா? | Elangovan Explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்நாளை 'டிசம்பர் 15' அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆனால் அதற்கு முன்பாகவே உட்கட்சி பஞ்சாயத்துகள், வழக்குகள் என எடப்பாடியை சுற்றி எக்கச்சக்க இடி. மிரட்டும் சிக்கல்களில் இருந்து மீள, ... மேலும் பார்க்க