செய்திகள் :

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

post image

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது.

ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். புர்குண்டா மற்றும் பத்ரது ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் வந்தபோது, ​​அந்தப் பெண் தனது கணவரால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக தண்ணீர் கிடந்த பள்ளத்தில் விழுந்ததால் காயமுடன் உயிர் தப்பினார். ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் அவரை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மருத்துவர்கள் ராஞ்சி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

பர்கானா ரயில்வே காவல் அதிகாரி னோகர் பர்லா கூறுகையில், காயமடைந்த பெண் ஒரு பள்ளத்தில் இருப்பதை ரயில்வே லைன் ஊழியர் ஒருவர் பார்த்து, பத்ரதுவில் உள்ள ரயில்வே போலீஸுக்கு தகவல் அளித்தார் என்றார்.

உத்தரபிரதேச மாநிலம் தேவரியாவைச் சேர்ந்த காயமடைந்த பெண் குஷ்பூ குமாரி, தனது வாக்குமூலத்தில், ஒரு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்ட தனது கணவருடன் பர்கானா சந்திப்பிலிருந்து வாரணாசிக்கு பயணித்துக்கொண்டிருந்தேன்.

தன்னைக் கொல்லும் நோக்கிலே, தனது கணவர் வேகமாக சென்ற ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரி மேலும் கூறினார்.

Summary

A 25-year-old man from Uttar Pradesh on Friday allegedly pushed his wife out of a running train in Jharkhand, a police officer said.

இதையும் படிக்க.. 148 ஆண்டுகளில்.. வரலாற்றுச் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க

மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: கேரள சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி போராட்டம்

கேரள மாநிலம், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி, காங்கிரஸ், பாஜக உள்ளி... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசித்திரமானது: தில்லி நீதிமன்றத்தில் சோனியா தரப்பு வாதம்

நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் வழக்கு விசித்திரமாக உள்ளது என்று தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தரப்பில் வெள்ளிக்கிழமை வாதிடப்பட்டது. நேஷனல் ஹெரால்ட் பத்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான செயல்பாடு: அதிகாரிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

கடற்படை போா் விமானத்தின் முதல் பெண் விமானியாக லெப்டினன்ட் புனியா தோ்வு

இந்திய கடற்படையின் போா் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, கடற்படையின் போா் விமானத்... மேலும் பார்க்க

புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லையில்லை: டிரினிடாட்-டொபாகோவில் பிரதமா் மோடி

புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லையில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா். கரீபியன் இரட்டை தீவு நாடான டிரினிடாட்-டொபாகோவில் இந்திய வம்சாவளியினா் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமா் ... மேலும் பார்க்க