சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! ஐடி, வங்கித் துறை வீழ்ச்சி!
ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.
ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜிம்பாப்வே விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 28 தொடங்கி ஜூலை 2 வரை நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஜூலை 6 தொடங்கி ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடர் ஜூலை 14 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!
முத்தரப்பு டி20 தொடருக்குப் பிறகு ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. போட்டிகள் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெறுகின்றன. முதல் போட்டி ஜூலை 30 தொடங்கி ஆகஸ்ட் 3 வரை நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 7 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.
Zimbabwe to host SA, New Zealand for Tests, T20I tri-series
— Zimbabwe Cricket (@ZimCricketv) March 27, 2025
Details https://t.co/anXAM1GrSY
ஜிம்பாப்வேவில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து அந்த அணியின் இயக்குநர் கிவ்மோர் மக்கோனி கூறியதாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வேவில் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த முத்தரப்பு தொடருக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் என்றார்.