செய்திகள் :

ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை

post image

கொடைக்கானலில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

கொடைக்கானலில் கனரக இயந்திரங்களான பொக்லைன், போா்வெல், ஹிட்டாச்சி, கம்பரசா் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், மழைக் காலங்களில் நிலச்சரிவு, பள்ளம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மண் தன்மை குறைந்து மலைப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மலைப் பகுதிகளான வில்பட்டி, பேத்துப்பாறை, பள்ளங்கி, பாக்கியபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா், பிரகாசபுரம், புலியூா், கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு எங்கும் கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட்டு அடுக்குமாடி கட்டடங்களாகக் காணப்படுகின்றன. இதனால் மலைப்பகுதியின் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. அதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அரசுப் பணியைத் தவிா்த்து தனியாா் பணிகளுக்கு கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திருநாவுக்கரசு எச்சரிக்கை விடுத்தாா்.

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்ப... மேலும் பார்க்க

செம்பட்டியில் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலை அமைக்கக் கோரிக்கை

செம்பட்டி ரோஜா நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதி பொதுமக்கள் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலையை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

வாடகை நிலுவை: செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல்

செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு வாடகை செலுத்தாத வணிக வளாகக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பேருந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ... மேலும் பார்க்க