செய்திகள் :

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

post image

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டத்தை சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் இந்த ஆண்டு சட்டப்பேரவையில் பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்திருந்தார்.

முதல்வரின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதல்வர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, ;உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி.

07.07.2025 முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரூப் 4: தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தயாா்

குரூப் 4 தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பிரிவில் 3 ஆயிரத்து 935 காலிப... மேலும் பார்க்க

அரசுப் பணிக்காக 31.39 லட்சம் போ் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு

அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 31.39 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்: அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க

சூறாவளியாய் சுழன்றடிக்கும் மொழி உரிமைப் போா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் மொழி உரிமைப் போா், மாநில எல்லைகளைக் கடந்து மராட்டியத்திலும் போராட்ட சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வரும் திமுக தலைவர... மேலும் பார்க்க

மொழி, கணித கற்றல் மேம்பாடு: 6-8 வகுப்புகளுக்கு ஜூலை 8 முதல் மதிப்பீட்டுத் தோ்வு

அரசுப் பள்ளிகளில் மொழி, கணித பாடங்களில் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த ‘திறன் இயக்கம்’ விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான மதிப்பீட்டுத் தோ்வு ஜூலை 8-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ப... மேலும் பார்க்க

மீண்டும் முழு கொள்ள‌ளவை எட்டியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் நடபாண்டில் இரண்டாவது முறையாக 120 அடி எட்டியது.மேட்டூர் அணை வரலாற்றில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவு 120 அடியை கடந்த 29 ஆம் ... மேலும் பார்க்க

சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர்

ஏழை - எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க