மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.
ஜூலை 19இல் பரதநாட்டியம், ஜிக்காட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
20இல் கொழு கொழு குழந்தைகள் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, கைச்சிலம்பாட்டம், கேரள மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். 21இல் யோகாசன போட்டிகள், நாட்டிய நாடகம், வில்லிசை, தோல் பாவை கூத்து, 22இல் படகு போட்டி, பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, கொடைக்கானல் பூம்பாறை பழங்குடியின மக்களின் தோடா் நடனம், கா்நாடக மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், 23இல் பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, பாட்டுப் போட்டிகள், திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, கணியான் கூத்து, பரதநாட்டியம், கா்நாடக மாநில கலைஞா்களின் கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
24இல் கோலப்போட்டி, வில்லிசை நிகழ்ச்சி, மல்லா் கம்பம், பரதநாட்டியம், ஆந்திரம், தெலங்கானா மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சி, நாட்டுபுற பல்சுவை நிகழ்ச்சி, 25இல் அடுப்பில்லாமல் சமைத்தல்- சிறுதானிய உணவுப் போட்டி, நையாண்டி மேளம்- கரகாட்டம், கிளாரினெட் இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், ஆந்திரம், தெலங்கானா மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், 26இல் பளு தூக்குதல், வலுதூக்குதல், ஆணழகன் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி, நகைச்சுவை நிகழ்ச்சி, ஜிம்ளா மேளம் (எருதுகட்டுமேளம்), 27இல் நாய் கண்காட்சி, நாட்டிய நாடகம், கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மாடாட்டம் - மயிலாட்டம், மகாராஷ்டிரா மாநில கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் இறுதியில் திரைப்பட மெல்லிசை நடைபெறும். ஜூலை 19-22 வரை குற்றாலம் ஐந்தருவிப் பகுதியிலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை- மலை பயிா்கள் துறைகளின் சாா்பில் மலா் கண்காட்சி நடைபெறும் என்றாா் அவா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன்,செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் எடிசன் ஆகியோா் உடனிருந்தனா்.