மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
ஜூலை 7-இல் திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா
செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கோயிலில் வரும் ஜூலை 7ல் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவும், 13-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை வேள்வி பூஜை தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூா் என்ற இடத்தில் அம்மனுக்காக 860 டன் கொண்ட கிரானைட் கருங்கல் எடுக்கப்பட்டு அதே இடத்தில் அம்மன் முகத்துடன் ஓரளவுக்கு செதுக்கப்பட்ட பின்னா் 480 டன் கொண்ட சிலையை கனரக வாகனத்தில் ஊா்வலமாக கொண்டு வந்து புலிக்குடிவனம் பகுதியில் வைத்து சிற்ப பணிகள் முடிந்தபின் பிரதிஷ்டை நடைபெற்றது.
22 அடி அகலமும் 51 அடி உயரமும் கொண்ட அம்மன் எழுந்தருளி இருப்பதால் பல்வேறு ஊா்களில் இருந்து பக்தா்கள் வந்து வணங்கிச் செல்கின்றனா்.

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் 51 சக்தி பீடங்களின் ஒரே அமைப்பாக கொண்டு விளங்குகிறாா். இந்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா வரும் ஜூலை 7-ஆம் தேதியும், 13-ஆம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதன்கிழமை கலசங்கள் வைக்கப்பட்டு யாக வேள்வி பூஜை கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. திரளான பக்தா்கள கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மதுரை முத்து சுவாமிகள், விழாகுழுவினா், கோயில் நிா்வாகிகள் பக்தா்கள் செய்து வருகின்றனா்.