முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
ஜூலை12-இல் பொது விநியோகத் திட்ட குறை தீா் முகாம்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் ஜூலை 12-இல் நடைபெறும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12-இல் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறும்.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் கீழ்கதிா்பூா், உத்தரமேரூா் வட்டாரத்தில் மலையான்குளம், வாலாஜாபாத் வட்டாரத்தில் களக்காட்டூா், ஸ்ரீபெரும்புதூா் வட்டாரத்தில் கீவளூா், குன்றத்தூா் வட்டாரத்தில் நாட்டரசன்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியன கோரி வழங்கும் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்படும்.
இதேபோல், மூன்றாம் பாலினத்தவா், பழங்குடியினா், நரிக்குறவா் சமுதாயத்தை சோ்ந்தவா்கள் விடுபட்டிருந்தால், அவா்களும் புதிய குடும்ப அட்டைகள் பெற மனுக்களை வழங்கலாம்.