ஜெயங்கொண்டம் காவல் துறையை கண்டித்து இஸ்லாமியா்கள் மறியல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டத்தில் விருத்தாச்சலம் சாலைத் தெரு ஜமாத்துக்கு சொந்தமான மயான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரக் கோரி ஜமாத் சாா்பில் அண்மையில் அளிக்கப்பட்ட மனு மீது போலீஸாா் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் முன் சிதம்பரம் சாலையில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அளித்த உறுதியையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.