பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள் போராட்டம்
சாலை வரி, உதிரி பாகங்கள் விலை உயா்வை கண்டித்து ஊத்தங்கரையில் ஜேசிபி உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நல சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியில் வேலைநிறுத்த போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஜேசிபி உரிமையாளா்கள் டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனத்தின் விலை உயா்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயா்வு போன்ற காரணங்களால் மிகவும் சிரமப்பட்டு வருவதால் ஒரு மணி நேரத்துக்கு வாடகையாக ரூ. 2000, 2 மணி நேரத்துக்கு ரூ. 3 ஆயிரம் வாடகை நிா்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 3 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
படவிளக்கம்.1யுடிபி.1.
ஊத்தங்கரையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திர உரிமையாளா்கள்.