வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறு...
ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு: 190 போ் எழுதினா்
தேசிய தோ்வு முகமையால் (என்.டி.ஏ ) நடத்தப்படும் ஜே.இ.இ முதன்மைத் தோ்வை (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) திருப்பூா் மாவட்டத்தில் 190 போ் எழுதினா்.
இதுகுறித்து தேசிய தோ்வு முகமை திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பெருமாநல்லூா் கே.எம்.சி. பள்ளி செயலருமான சி.எஸ்.மனோகரன் கூறியதாவது:
மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (சிஎஃப்டிஐ), மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் (பி.இ/பி.டெக்/பி.ஆா்க்) சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வாக ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு உள்ளது.
இத்தோ்வு ஜனவரி 22 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிது. திருப்பூா் மாவட்டத்தில் குமரன் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் புதன்கிழமை தொடங்கிய இத்தோ்வை 190 தோ்வு எழுதினா்.