செய்திகள் :

டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

post image

புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்திலிருந்து அதிக வருவாய் கிடைத்ததன் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262 கோடியாக உள்ளது.

2024 ஜூன் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,189 கோடியாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்ததது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.16,810 கோடியாக இருந்த வருவாய் இந்த காலாண்டில் அது ரூ.17,464 கோடியாக உயர்ந்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோகத் தொழில்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டி வருவதாகவும் டாடா பவரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.

நிறுவனம் 1 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மின்சாரத்தை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

The company had a net profit of Rs 1,189 crore in the quarter ended June 30, 2024

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படிய... மேலும் பார்க்க

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

புதுதில்லி: உள்நாட்டு வருவாய் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.5 சதவிகிதம் அதிகரித்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.2024 ஜூலையில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வ... மேலும் பார்க்க

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

புதுதில்லி: பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி தனது ராஜினாமாவை அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 18% சரிந்தன.பிஎஸ்இ-யில் அதன் பங்கு 18.06 சத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவடைந்தது.இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பால், ரூபாய் மதிப்பு குறைவது குறித்த கவலை அதிகரித்த... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

மும்பை: வரி விதிப்பு தொடர்பான கவலைகள் மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தன.தொடக்க வர்த்தகத்தில், 30 ... மேலும் பார்க்க