டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!
மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிந்தது.
பணப்புழக்க கட்டுப்பாடுகள், பரஸ்பர கட்டண அமலாக்கங்கள் குறித்த கவலைகள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து அமெரிக்க டாலருக்கான மாத இறுதி தேவை ஆகியவற்றால் ரூபாய் அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதாக அந்நிய செலாவணி வர்த்தர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.71 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.68 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.98 ஐ தொட்ட நிலையில், முடிவில் 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிந்தது.
நேற்றைய (செவ்வாய்க்கிழமை) வர்த்தகநேர முடிவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.72ஆக முடிந்தது.
இதையும் படிக்க: வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு!