சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு
டிச.18-இல் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம்
சென்னை: திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.