அதிமுக தலைமையில்தான் கூட்டணி; நானே முதல்வர் வேட்பாளர்! - இபிஎஸ்
டிடிஇஏ பள்ளிகளில் வன மகோத்சவ் கொண்டாட்டம்
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் வன மகோத்சவ் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
வன மகோத்சவ் என்பது இந்தியாவில் ஆண்டு தோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரக்கன்றுகளை நடும் திருவிழாவாகும்.
நாட்டில் காடுகளை அதிகம் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், உணவு வளங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், நிழல் மற்றும் அலங்கார நிலப்பரப்புகளை உருவாக்குவதற்காகவும் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் அதிகமான மரங்கள் வளா்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணா்வை மாணவா்கள் மத்தியில் கொண்டு வருவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இடம் பெற்றது. மாணவா்கள் பல்வேறு பாதாகைகளை காட்சிப்படுத்தினா். கவிதைகளையும் வாசித்தனா். பின்னா் பள்ளி முதல்வா்கள் மற்றும் மாணவா்கள் அந்தந்தப் பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களையும் செயலா் ராஜூ பாராட்டினாா்.