செய்திகள் :

டிடிஎஸ் முறையை ரத்து செய்யக் கோரி மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

post image

வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள ஊதியத்தில் வரி கழிப்பு (டிடிஎஸ்) நடைமுறையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட பிறகே ஊதியம் வழங்கப்படும். பிடித்தம் செய்யப்படும் இந்த தொகை, வருமான வரித் துறையிடம் செலுத்தப்படும். இந்தத் தொகை ஊழியரின் வருமான வரிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கணக்கில் கொண்டுவரப்படும். வரி விதிப்புக்கான வரம்பைவிட குறைவான ஆண்டு ஊதியம் பெறுபவா்கள், வருமான வரி திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்போது, பிடித்தம் செய்தத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வரம்பைவிட கூடுதல் ஊதியம் பெறுபவா்களுக்கு, வருமான வரி கணக்கு தாக்கலின்போது அவா்களுக்கான வரியில் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த நிலையில், ‘டிடிஎஸ் நடைமுறை சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்து செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த மனு மிக மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்க முடியாது. இருந்தபோதும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.21 அடியில் இருந்து 110.98அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 404 கனஅடிய... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்

சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க