செய்திகள் :

டிரம்ப் அச்சுறுத்தல்: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

post image

இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை காலை முதலே உயர்வுடன் வர்த்தகமாகின. இறுதியில், சென்செக்ஸ் 81,000 புள்ளிகளுடனும் நிஃப்டி 24,722.75 புள்ளிகளுடனும் நிறைவுபெற்றது.

இதனிடையே, இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தை சரிவைக் கண்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் காலை 11.30 மணி நிலவரப்படி 346 புள்ளிகள் சரிந்து 80,672 புள்ளிகளில் வர்த்தகமானது.

இன்போசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இதேபோல், நிஃப்டியும் காலை 11.30 மணி நிலவரப்படி 93 புள்ளிகள் சரிந்து 24,630 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றது.

The Indian stock market has been trading in a bearish mood since the start of trading on Tuesday morning.

இதையும் படிக்க : ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அசாமில் 3.65 லட்சம் இணைப்புடன் தொடரும் ஜியோ சேவை!

குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட்... மேலும் பார்க்க

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் லாபம் ரூ.292.5 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 26 சதவிகிதம் அதிகரித்து ரூ.292.5 கோடியாக உள்ளதாக ... மேலும் பார்க்க

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.98,820 ஆக உள்ளதாக அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்தது. அதே வேளையில் 99.9 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் அதன் முந்தைய சந்தை முடிவில் ... மேலும் பார்க்க

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

மும்பை: புதுதில்லி தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக தனது அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 6 அன்று, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வங்கி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்றய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான ... மேலும் பார்க்க