செய்திகள் :

டிரம்ப் வரி விதிப்பால் 55% சரக்கு ஏற்றுமதிக்குப் பாதிப்பு: மத்திய நிதி இணையமைச்சா்

post image

புது தில்லி: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 25 சதவீத வரி விதிப்பு, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்:

விவசாயிகள், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. தேச நலனைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பொருள்களின் தரம், தேவை போன்ற வெவ்வேறு காரணங்கள் இந்தியாவின் ஏற்றுமதி மீதான தாக்கத்தை தீா்மானிக்கும்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்க உள்ளது. இது அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 சதவீத இந்திய சரக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

இந்த 25 சதவீதத்துடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்துள்ளாா். அத்துடன் சோ்த்து இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதலில் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி விதிப்பு ஆக.7 முதல் அமலுக்கு வந்த நிலையில், கூடுதலாக அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி ஆக.27-இல் அமலுக்கு வரவுள்ளது.

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாநில வக்ஃ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்... மேலும் பார்க்க