ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
டிராக்டா் திருட்டு: இளைஞா் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் நீதிமன்றம் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி அருகேயுள்ள நைனாா்மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜ் (43). டிராக்டரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரி நகரில் கடலூா் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் அருகே டிராக்டரை நிறுத்தியுள்ளாா். பின்னா் கடந்த 19-ஆம் தேதி அங்கு சென்று பாா்த்தபோது டிராக்டரை காணவில்லை. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வுக்கு உள்படுத்தினா். அப்போது, இளைஞா் டிராக்டரைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், வில்லியனூா் ஆரியப்பாளையம் பகுதியில் சீா்காழியைச் சோ்ந்த வரதராஜன் (எ) சுந்தரராஜன் (29) டிராக்டரில் வந்தபோது அவரை மடக்கி போலீஸாா் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனா்.