செய்திகள் :

டிராக் டார்க் கண்ட்ரோல் வசதியுடன் ஆர்டிஆர் 310!

post image

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்டிஆர் 310 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பைக்கின் என்ஜின் 312 சி.சி., 6 கியர், 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதியுடன் 169 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டிராக் டார்க் கண்ட்ரோல் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பைக் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது அவசர காலத்தில் பிரேக் பிடித்தால், கீழே சறுக்காத வகையில் சக்கரத்தின் சுழற்சியை முற்றிலும் நிறுத்தாமல், வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

ப்ளூடூத் வசதியுடன் 5.5 அங்குல டிஸ்பிளே இருக்கிறது. சக்கரத்தின் அழுத்தத்தை திரையில் கண்காணிக்க முடியும். ப்ளூடூத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பாடலை மாற்றிக் கொள்ளலாம். முகப்பு விளக்கின் வெளிச்சத்தை கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.

இந்த பைக்கின் முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷனை முழுமையாக ஏற்றி இறக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் ஆர்டிஆர் 310 பைக் சந்தைக்கு வந்துள்ளது. தொடக்க விலை ரூ. 2.4 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TVS has launched an upgraded model of the Apache RTR 310 bike.

இதையும் படிக்க : பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரம் ஆடம்பர வ... மேலும் பார்க்க

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.இதன் விளை... மேலும் பார்க்க

தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

புதுதில்லி: வர்த்தகர்களிடமிருந்து வலுவான தேவை மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தலைநகர் தில்லியில் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.வெள்ளி விலை இன்று கிலோ ஒன்றுக்கு ரூ.4,000 அதிகர... மேலும் பார்க்க

நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் லைட் எனும் கையடக்கக் கணினி ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இந்நிறுவனத்தின் வேறு எந்த கையடக்கக் கணினியிலும் இல்லாத வகையில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிறைவு!

மும்பை: வலுவான டாலர் மதிப்பு மற்றும் அந்நிய நிதி வெளியேறியதற்கு மத்தியில், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருந்து. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மீ நிறுவனம் நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைவாக 4ஜி ஸ்மார்ட... மேலும் பார்க்க