டிவி மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது
வந்தவாசி அருகே டிவி மெக்கானிக்கை தாக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் டிவி மெக்கானிக் சரவணகுமாா் (42). இவா், கடந்த 18-ஆம் தேதி அந்தக் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, முன்விரோதம் காரணமாக இவரை வழிமறித்த இதே கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28), பூவரசன் (20) ஆகியோா் தகராறு செய்து தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ், பூவரசன் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.