டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த ஷுப்மன் கில்!
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் தில்லி கேபிடல்ஸை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. பிளே ஆஃப் சுற்றுக்கும் குஜராத் டைட்டன்ஸ் முன்னேறியது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே விக்கெட் இழப்பின்றி எடுத்தனர். அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், ஷுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
5000+ ரன்கள்...
நேற்றையப் போட்டியில் 93 ரன்கள் எடுத்ததன் மூலம், ஷுப்மன் கில் டி20 போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதுவரை 157 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 5072 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 129 ஆகவும், சராசரி 38.42 ஆகவும் உள்ளது.
இதையும் படிக்க: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?
Add more reasons to why we love our ! pic.twitter.com/Q4qPn11JRf
— Gujarat Titans (@gujarat_titans) May 18, 2025
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஷுப்மன் கில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.