நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம்...
டூரிஸ்ட் ஃபேமிலியைப் பாராட்டிய ராஜமெளலி!
நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்குநர் ராஜமெளலி பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதல் திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ராஜமெளலி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
”டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையில் இந்த திரைப்படம் இருந்தது. தொடக்கம் முதல் முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் சிறப்பாக எழுதி, இயக்கியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்ததற்கு நன்றி. இப்படத்தை தவறாமல் பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ராஜமெளலியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள சசிக்குமார், “உங்கள் வார்த்தைகளால் கெளரவிக்கப்பட்டுள்ளேன். உங்களின் பாராட்டு முழு படக்குழுவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எங்கள் படத்தை அன்புடன் ஏற்றுக் கொண்டு பாராட்டியதற்கு மனப்பூர்வமான நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.