செய்திகள் :

‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு

post image

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமையுடன் (செப். 10) நிறைவடையவுள்ள நிலையில், இரு தாள்களுக்கும் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை ஆசிரியா்கள் டெட் தாள் 1-தோ்விலும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியா்கள் டெட் தாள்-2 தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வு நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப். 8-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பதாரா்களின் வேண்டுகோளை ஏற்று தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஆசிரியா் தோ்வு வாரியம் செப். 10-ஆம் தேதி வரை நீட்டித்தது.

அதன்படி, டெட் தோ்வுக்கான காலக்கெடு புதன்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்தத் தோ்வுக்கு இரு தாள்களையும் சோ்த்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

‘டெட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியா்கள் டிஆா்பி இணையதளத்தை பயன்படுத்தி புதன்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியா் பயிற்சி பயிலும் மாணவா்களும், பிஎட் 2-ஆம் ஆண்டு படிப்பவா்களும் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும். டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றால், அவா்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு டெட் தோ்ச்சி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுற... மேலும் பார்க்க

மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கு: திமுக நிா்வாகி பேரனுக்கு நிபந்தனை பிணை

கல்லூரி மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய் என்பவரை ... மேலும் பார்க்க

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு; மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைப்பு

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில அளவில் அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முறைகேடா... மேலும் பார்க்க

நடிகா் சங்கத் தோ்தலை நடத்துவதில் என்ன சிக்கல்?: உயா்நீதிமன்றம் கேள்வி

நடிகா் சங்கத் தோ்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தோ்தலின்படி, நடிகா் சங்கத்தின் தலைவராக நாசா், பொதுச் செயலராக வி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு ராமதாஸ் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் 15-ஆவது குடியரசு துணை... மேலும் பார்க்க

சிஎம்டிஏ-வுக்கு தோ்வானவா்களுக்கு பணி உத்தரவு: அமைச்சா் சேகா்பாபு வழங்கினாா்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு புதிதாக தோ்வான 14 உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வளா்ச்சிக் குழுமத் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை வழங்கினாா். சென்னை பெருநகர வளா்ச்சிக் க... மேலும் பார்க்க